விண்வெளி கூட்டுறவை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் விரிவுபடுத்துவதற்காக இன்று புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஒப்பந்தம் கையெழுத்தானது .கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இடையில் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இரு நாட்டு தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையிலான விண்வெளி கூட்டுறவை மேலும் விரிவுபடுத்த இன்று மீண்டும் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா விண்வெளி ஏஜென்ஸி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இடையில் புதிய முயற்சிகள் ,கல்வி ,மேம்பாடு மற்றும் புதிய விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனத்தை செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் இந்தியாவில் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது .
வரக்கூடிய 2023 ஆம் ஆண்டுகளில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் ஆஸ்திரேலியா விண்வெளி ஏஜென்சியின் பங்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுமார் 700 மில்லியன் டாலருக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.