பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்ததால் அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது உயர் கல்விக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. வரும் பொதுத் தேர்வு குறித்து ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் கேட்கப்பட்டது.
ஆனால் பாடங்களை இன்னும் முழுமையாக நடத்தி முடிக்கவில்லை என்றும் தேர்வுக்கு கூடியவிரைவில் தயாராக முடியுமா என்ற சந்தேகம் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் மாணவர்களும் தங்களுக்கு போதிய காலம் இல்லை என்றும், தேர்வுக்கு தாங்கள் தயாராவது பெரும் கடினமாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளால் குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராக முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆகையால், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என மூன்று தரப்பினரும் கோரிக்கைகளை ஏற்று தேர்வினை சற்று தள்ளிவைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.