Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஈபிஎஸ் – ஓபிஎஸ்-க்கு புதிய அதிர்ச்சி… சசிகலா நீதிமன்றத்தில் முறையீடு…!!!

தமிழகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-க்கு புதிய அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சசிகலா நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-க்கு புதிய தலைவலியை கொடுக்கும் வகையில், 2017 ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சிவில் நீதிமன்றத்தில் சசிகலா முறையீடு செய்துள்ளார். சசிகலாவின் முறையீட்டை மார்ச் மாதம் 15ஆம் தேதி விசாரிப்பதாக சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |