நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர், தண்டையார்பேட்டை தாலுகாவை பொறுத்தவரை 88 நபர்களுக்கு இன்றைய தினம் மாற்று திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, விதவை தொகை, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்றோருக்கான தொகை இது போன்ற பல்வேறு வகைகளில் அரசியல் உதவி செய்திருக்கிறது.
மீன்வளத்துறையை பொறுத்தவரை கடந்த புயலின் போது சென்னை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு மோதிக் கொண்டு முழுமையான அளவுக்கு சேதமடைந்து, கணக்கெடுப்பு செய்யப்பட்டு, 1கோடி 65லட்சம் ரூபாய் படகு உரிமையாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மீனவர்களுக்கு எதிர்பாராத விதமாக இயற்கை சீற்றம் ஏற்படும் போதோ, இல்லை என்றால் வேறு விதமாக அவர்களுக்கு மீன் பிடி சாதனங்கள் பழுது பட்டு உபயோகிக்க முடியாத நிலை வரும்போதும், பிரச்சனைகள் ஏற்படும் போதும், அந்த நேரத்தில் அரசினுடைய உதவி ஒரு பக்கம் இருந்தாலும் கூட, மீனவர்களின் பங்கு இருக்க வேண்டும் என்ற வகையிலே ஒரு நிதி உருவாக்கப்பட்டது.
ஆங்கிலத்திலேயே சொலுஷன் பண்ட் என்று சொல்வார்கள். 1991ஆம் ஆண்டில் அம்மாவிடம் பேசி, உத்தரவு பெற்று அன்றைக்கு நான் உருவாக்கிய நிதி இது. இன்றைக்கு லட்சக்கணக்கில் நிதி சேர்ந்து, சென்னை மீனவர்களுக்கு நல்ல பயன் தருகின்ற ஒரு வகையிலே இருந்திருக்கிறது.
உதாரணத்திற்கு ஒரு விசைப்படகை கட்டும்போது தீடிரென்று தீ பிடித்து விடும். தீ பிடிக்கும்போது ஏற்பட்ட இழப்பீடு காப்பீடு மூலம் கிடைக்க காலதாமதம் ஆகும். உடனடியாக நிதி கிடைக்காமல் சிரமப்படுவார்கள் அந்த நேரத்துல மீனவர்கள் கஷ்டப்படுவார்கள் அந்த நேரத்தில் கொடுக்கப்படுவது தான் இந்த சொலுஷன் பண்ட் கொடுக்கப்படும். இது நான் கொண்டுவந்ததிட்டம் எனஅமைச்சர் ஜெயக்குமார்பெருமிதம் தெரிவித்தார்.