Categories
தேசிய செய்திகள்

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு… வெளியான முக்கிய தகவல்…!!!

நாடு முழுவதும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை முழுமையாகத் திறந்து இரண்டு மாதங்கள் பாடங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தினால் மட்டுமே அனைத்து மாணவர்களையும் பள்ளிகளில் அமர வைக்க முடியும். இல்லையென்றால் வகுப்பறைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும். இதுகுறித்து சுகாதாரத் துறையின் ஒப்புதல் கேட்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Categories

Tech |