Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள்

அடடே…! இப்படி ஒரு தலைவரா ? அண்ணனாக மாறிய ராகுல்…! புத்துயிர் பெறும் காங்கிரஸ் …!!

தமிழகத்தை போல புதுவைக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகின்றனர். நேற்று கூட புதுச்சேரிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பிறகு அங்குள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மாணவிகள் ராகுல், ராகுல் சார் என்று சொல்லியதையடுத்து என்னை யாரும் சார் என்று கூப்பிட வேண்டாம், ராகுல் என்று கூப்பிடுங்கள் என்று கூறினார். பிறகு மாணவிகள் அனைவரும் ராகுல், ராகுல் அண்ணா என்று கூப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராகுலின் வருகை குறித்து கல்லூரி மாணவிகள் கூறுகையில், மிகவும் எளிமையாக இருக்கிறார்.

அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர் ஆக இருக்கிறார் என தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். பொங்கல் நேரத்தில் தமிழகம் வந்த ராகுல் காந்தியின் எளிமையை மக்கள் அனைவரும் பேசினர். இந்தியா முழுவதும் பரவலாக ராகுல் காந்தியின் எளிமை பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த பயணமும் மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது

 

Categories

Tech |