புதுச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த கிரண்பேடிக்கும், புதுச்சேரி அரசுக்கும் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கிரண்பேடி கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சட்டசபை தேர்தல் தேதி வெளியாக இருக்கும் நிலையில், பதவிக்காலம் முடிவதற்கு சில மதத்திற்கு முன்பாகவே கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து துணைநிலை ஆளுநராக பேறுபெற்ற கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் மோதலில் ஈடுபட்ட போதும் அரசு நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர்.
பல்வேறு ஊழல்களையும் சரி செய்தவராவார். இந்நிலையில் புதுச்சேரியின் மாநில துணை நிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றார். இவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.