அமைச்சர் மீது மர்மநபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜாஹிர் உசேன். இவர் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ரயில்நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அமைச்சர் ஜாகிர் உசேன் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தாக்குதல் குறித்து காரணங்கள் எதுவும் வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது.