Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார் – இரங்கல்…!!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கேப்டன் சதீஷ் ஷர்மா(73) கோவாவில் காலமானார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காலமாகியுள்ளார். ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரான இவர் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் 1993 முதல் 1996 வரை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.

மேலும் இவர் 6 முறை எம்பியாக இருந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு விமானியாக பணியாற்றியவர். இவருடைய மறைவிற்கு தற்போது பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |