தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூடுதலாக 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, 234 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. தமிழகம் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதால் அதற்கான பணிகளை அரசியல் கட்சியல் இப்போதே தொடங்கி விட்டன. அதேபோல தேர்தலுக்காக ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையமும் தொடங்கியுள்ளது.
அந்த வகையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 100 சதவீத வாக்குகள் பதிவாகும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வாக்குப் பதிவு மையங்களை அமைப்பது என்பன தேர்தலுக்கான பல்வேறு பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூடுதலாக 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.