Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் அறிவிப்பு “பெட்ரோல் , டீசல் கிடுகிடு உயர்வு” பொதுமக்கள் அதிர்ச்சி …!!

பட்ஜெட் அறிவிப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலை கிடுகிடுவென உயர்வதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இன்று மக்களவையில் 2019_2020_க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார். அதில் சாலை வசதிகளை மேம்படுத்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த்தப்படுமென்று அவர் தெரிவித்தார். இதனால் இன்று இரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்கின்றது. நெடுஞ்சாலைத்துறை காண கூடுதல் வரி மற்றும் கூடுதல் கலால் வரி இரண்டுமே ஒரு ஒரு லிட்டருக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நெடுஞ்சாலை வரி ரூபாய் 1 மற்றும்  உற்பத்தி வரி ரூபாய் 1  சேர்த்து லிட்டருக்கு 2 ரூபாய் சேர்த்து  நிர்ணயிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதோடு மாநிலத்து மாநிலம் மாறுபடும் உள்ளூர் வரியை சேர்த்து 1 லிட்டர் பெட்ரோல் 2.50 காசும் , டீசல் 2.30 காசும் உயர்கின்றது. இந்த விலை இன்று மாலை முதல் அமுலுக்கு வருகின்றது. பெட்ரோல் மற்றும் டீசலின் தீடிர் உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |