Categories
தேசிய செய்திகள்

சுதந்திரத்துக்கு பின்… நாட்டை உலுக்கும் பரபரப்பு தீர்ப்பு…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலித்தவரை மணமுடிக்க தடையாக இருந்த குடும்பத்தினரை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா நகரைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது காதலனுடன் இணைந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொன்றார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷப்னத்துக்கு மரண தண்டனை விதித்தது.

இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது. அவரது கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஒரு பெண்ணுக்கு முதல்முறையாக தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |