கள்ளக்குறிச்சியில் சர்க்கரை ஆலையை ஒரு வாரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் சம்பத் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.
இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, கள்ளக்குறிச்சியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்காமல் மூடிக் கிடப்பததால் , கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுகின்றனர். எனவே , ஒரு சர்க்கரை ஆலையையாவது இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் சம்பத் பேசுகையில் , கரும்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த சர்க்கரை ஆலை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது, இந்த குழு ஒரு வாரத்திற்குள் தனது அறிக்கையை அளிக்க இருப்பதால் , அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சியில் மூடிக் கிடந்த சக்கரை ஆலைகளில் ஏதேனும் ஒன்றை இயக்க ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.