Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் பணப்பையை பறித்த…. கொள்ளையர்களை துரத்தி பிடித்த…. இளைஞருக்கு குவியும் பாராட்டு…!!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசிப்பவர் கார்த்தி. இவர் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதையடுத்து இவர் சம்பவத்தன்று தெருவில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் இரண்டு பேர் கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் இருந்து கைப்பையை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து கார்த்திக் அவர்களை துரத்தி பிடித்து அவர்களிடமிருந்து அந்த பையை மீட்டுள்ளார்.

அந்த கைப்பையில் ஒரு லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அதை மீட்டுத் அந்த பெண்ணிடம் கார்த்திக் கொடுத்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் கொள்ளையனை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையனை விரட்டிப் பிடித்து பணப்பையை மீட்ட கார்த்தியை காவல்துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |