கொரோனாவிலிருந்து தப்பிக்க தாய் மற்றும் மகன் சிறுநீரை குடித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வுகளை அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மக்கள் மூட நம்பிக்கைகள் காரணமாக தவறான தகவலின் பேரில் மருந்து என்ற பெயரில் சில தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் லண்டனை சேர்ந்த தாய் மற்றும் அவருடைய மகன் இருவரும் தங்களுடைய சிறுநீரை நான்கு நாட்களாக பிடித்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் குறிப்பிட்ட தாய் மற்றும் மகளை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது விசாரணையில் அவருடைய சொந்தக்காரர் ஒருவர் வாட்ஸ் அப்பில் அனுப்பிய வீடியோவை நம்பி இது போன்ற செயலில் ஈடுபட்டது தெரிவித்துள்ளனர். இதையடுத்து மக்கள் யாரும் இது போன்ற தவறான மூடநம்பிக்கை செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.