பொது இடத்தில் நடிகர் அஜித்தை சந்தித்த மக்கள் அவருடன் இணைந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளனர் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது . ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்தப்படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர் . இதன்பின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார்.
மேலும் சமீபத்தில் பொது இடத்தில் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்த செயலை கண்டித்து நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டிருந்தார் . இந்நிலையில் நடிகர் அஜித் வேப்பேரி கமிஷன் அலுவலகத்திற்கு திடீரென வருகை தந்துள்ளார் . அவரை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவருடன் இணைந்து செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர் . தற்போது நடிகர் அஜித் பொதுமக்களுடன் எடுத்துக்கொண்ட இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .