Categories
உலக செய்திகள்

நீதிபதிக்கு “100 காண்டம்கள்” பார்சல்… சர்ச்சை தீர்ப்பு அளித்ததாக கண்டனம்…!

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பெண் ஒருவர் 100க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சல் அனுப்பி வைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்

மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக 51 வயதுடைய புஷ்பா கனேதிவாலா என்ற பெண் நீதிபதி பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் கடந்த மாதம் ஜனவரி 19ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்தார். அதில் தோலோடு தோல் தொடர்பின்றி சிறுமியை சில்மிஷம் செய்வது போட்சோ சட்டப்படி குற்றமில்லை என்று தீர்ப்பளித்தார்.

அதன் பிறகு 5 வயது சிறுமி பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்தார். அதில் சிறுமியின் கையைப் பிடித்ததோ, பேண்ட் ஜிப்பை திறந்ததோ பாலியல் வன்முறை ஆகாது என்று கூறி குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தார்.இவரின் இந்த தீர்ப்புக்கு கடும் கண்டனம் எழுந்தது.

அதன்பிறகு அரசு இவரது பதவி காலம் குறைக்கப்பட்டதாக அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு அளித்த பெண் நீதிபதிக்கு, தேவஸ்ரீ திரிவேதி என்ற பெண் 100க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சல் அனுப்பி வைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |