Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்றவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திருவள்ளூரில் பரபரப்பு..!!

கடலில் மீன் பிடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மீனவர் அலையின் சீற்றத்தால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு பகுதியில் சிவக்குமார் என்ற மீனவர் வசித்து வருகிறார். சிவக்குமாருடன் 5 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மீன் பிடித்து விட்டு இரவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் சிவக்குமாரின் படகானது பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் திடீரென படகு கடலில் கவிழ்ந்து விட்டது. இதனால் தண்ணீரில் மூழ்கி சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து மீனவரின் உடல் கரையோரம் ஒதுங்கி கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பாலைவனம் காவல் துறையினர் சிவகுமாரின் உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பாலைவனம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |