திருச்சி தெப்பக்குளம் ஆண்டாள் தெரு பகுதியில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத நாகநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் எப்போதும் போல இல்லாது புதிதாக பூஜைகள் செய்துவரும் பூசாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் விஜயராணி அந்த சம்பந்தப்பட்ட பூசாரியை பணியிடை நீக்கம் செய்து புதிய அர்ச்சகரை நியமித்துள்ளார்.
இந்நிலையில் புதிய அர்ச்சகர் இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தபோது பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட அர்ச்சகர் கோவில் சாதியை வைத்துக்கொண்டு அவரிடம் கொடுக்க மறுத்துள்ளார். மேலும் அந்த பூசாரியை கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் கோவில் கருவறை பூட்டிக்கொண்டு அங்கு வந்த பக்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் கருவறை பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவில் அர்ச்சகர் இதுபோன்று வாக்குவாதத்தில் கோவில் கருவறையை மூடிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.