தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் அம்மா மினி கிளினிக்குகள், கவுண்டமணி- செந்தில் வாழைப்பழ நகைச்சுவை போல அமைந்துள்ளதாகவும் விமர்சித்தார்.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மேம்படுத்தப்படும் என்றும் உறுதி கூறினார். தமிழகத்தில் அவசியம் இல்லாத பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருவதாக கூறிய அவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என்று குற்றம் சாட்டியுள்ளார்.