Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இரக்கமற்ற தந்தை… கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை…விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

மனைவி மீது வந்த சந்தேகத்தால் பச்சிளம் குழந்தையை அவரது கணவர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள காக்கங்குடி பகுதியில் ராஜி என்கின்ற ஏழுமலை வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு சிவரஞ்சனி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜி வீட்டிற்கு மது அருந்தி விட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததால் சிவரஞ்சனி அவரை கண்டித்துள்ளார். அப்போது கோபமடைந்த ராஜி இது நமக்கு பிறந்த குழந்தையே இல்லை என்று சிவரஞ்சனியிடம் சந்தேகத்தில் கூறியுள்ளார். இந்த வாக்குவாதத்திற்கு பிறகு சிவரஞ்சனி நன்றாக தூங்கியதை அறிந்த ராஜி தொட்டிலில் இருந்து தனது குழந்தையை எடுத்துள்ளார். அதன்பிறகு பச்சிளம் குழந்தை என்று கூட பாராமல் கொடூரமாக அந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார்.

இந்நிலையில் சிவரஞ்சினி காலையில் வழக்கம் போல தனது குழந்தையை தூக்கியபோது பிறந்து 8 நாள்களே ஆன தனது குழந்தை இறந்த நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுதார். இச்சம்பவம் குறித்து ஒரத்தூர் காவல் நிலையத்தில் சிவரஞ்சினி புகார் அளித்துள்ளார். அதன் பின் ஒரத்தூர் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். பின்னர் போலீசார் ராஜியை சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையில் தனது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் காரணமாக பச்சிளம் குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஒரத்தூர் போலீசார் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக ராஜியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |