கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் படத்தின் ‘வேற லெவல் சகோ’ பாடல் நேற்று வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது . இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . அதில் ‘ஏ.ஆர் ரஹ்மான் கேட்டாச்சு. அடுத்து ஒரு யுவன் சங்கர் ராஜா போலாமா ? ஏன் ராஜா சார் மற்றும் யுவன் போலாமே ! 5 மணிக்கு சொல்றோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது .
.@arrahman kettachu… Aduthu oru @thisisysr polama? 🕺Yen, Raja sir + Yuvan polame! 🤩
5 manikku solrom! 🎶🥁🎷— KJR Studios (@kjr_studios) February 18, 2021
சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை தயாரித்து வரும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தை தயாரித்துள்ளது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலின் ரீமிக்ஸ் பாடல் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் இளையராஜா பணிபுரிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் டிக்கிலோனா பாடல் குறித்த அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .