Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு முன் இளம் பெண் ஓட்டம்… மைனர் சகோதரிக்கு தாலி கட்டிய மணமகன்… ஒடிசாவில் பரபரப்பு…!

ஒடிசா மாநிலத்தில் மைனர் சகோதரியை மணமகனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் கலாஹாண்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு இளம் பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணம் நடக்கவிருந்தது. திருமணம் நடப்பதற்கு முன் மணப்பெண் வேறு ஒரு நபருடன் சென்றுவிட்டார். அதன்பின் மணப்பெண் இல்லாததைக் கண்ட மணமகன் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆகையால் ஓடிப்போன மணப் பெண்ணின் குடும்பத்தார் ஒரு முடிவு எடுத்தனர்.

அதன்படி தனது இன்னொரு மகளான 15 வயது மகளை இதே முகூர்த்தத்தில் இதே மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தனர். மைனர் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பின் போலீசார் சிறுமியை பெற்றோர் வீட்டிலோ அல்லது விடுதியிலோ தங்க அனுமதித்தனர். மேலும் 18 வயதிற்கு பின்னரே கணவர் குடும்பத்தாருடன் செல்ல வேண்டும் என்று கூறினர்.

Categories

Tech |