தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா மற்றும் தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் கிடையாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் வழக்கு போட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வாஷிங் மெஷின் கொடுக்கப்பட உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். செய்தியாளர்களின் அந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்அதிமுக அறிக்கையில் இலவசமாக வாஷிங் மிஷின் தருவதாக உள்ளது உண்மை கிடையாது என்று தெரிவித்துள்ளார்.