இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் 14வது ஐபிஎல் டி20 போட்டிகளின் மினி ஏலம் இன்று நடைபெற்றது. அதில் 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். மேலும் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். அதில் ஒட்டுமொத்தமாக 1,114சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் எடுத்த தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சையது முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் ஹரி நிஷாந்த், ஷாருக்கான், சித்தார்த், அருண் கார்த்திக், பெரியசாமி, பாபா அபராஜித், முகமது மற்றும் சோனி யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதனையடுத்து இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 7 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவரை எடுக்க சென்னை மற்றும் பஞ்சாப் பணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அதனைப்போலவே சாகிப் அல் ஹசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 3.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது