Categories
தேசிய செய்திகள்

ரயிலுக்கு அடியில் போன பெண்…! வைரலாகும் திகிலூட்டும் வீடியோ… ஹரியானாவில் பரபரப்பு சம்பவம்…!!

ஹரியானாவில்  பெண்ணொருவர் ரயிலுக்கு  அடியில் படுத்துக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது .

ஹரியானா மாநிலத்தின் ரோதத் நகரை சேர்ந்த பெண்ணொருவர் சிக்னலுக்காக ரயில் நின்று கொண்டிருக்கும் போது  ரயிலின் அடியில் புகுந்து தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். ரயில் திடீரென புறப்பட தொடங்கியது உடனே அந்த பெண் ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் நகராமல் படுத்துக்கொண்டார்.

ரயில் கடந்து சென்ற பின்பு உடனே அங்கிருந்தவர்கள் தண்டவாளத்தில் இருந்த அப்பெண்ணை மீட்டு  அனுப்பிவைத்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் அந்த பெண்ணின் செயலை  குறித்து விமர்சித்து வருகின்றனர்

Categories

Tech |