ஐபிஎல் ஏலத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ்ஸை எடுக்க பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி தற்போது நடைபெற்று வந்த நிலையில், தென்ஆப்பிரிக்க வீரர்கள் கிறிஸ் மோரிஸ்ஸை சுமார் 16 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறது. முன்னதாக மெக்ஸ்வேலை 14 கோடியே 25 லட்சத்துக்கு பெங்களூரு அணி எடுத்து இருந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஆனா கிரிஸ் மோரிஸ் 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார்.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு கிரிஸ் மோரிஸ் பெங்களூர் அணி வாங்கி இருந்தது. தற்போது 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கி இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஏலத்தொகை இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய அதிகபட்சம் என்று பார்த்தோமானால் யுவராஜ் சிங் 16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். தற்போது அதையும் தாண்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் கிரிஸ் மோரிஸ்ஸை ஏலம் எடுத்துள்ளது.