Categories
லைப் ஸ்டைல்

தீராத மூட்டு வலியால் அவதியா?… அப்போ தினமும் இத சாப்பிடுங்க…!!!

தீராத மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இதனை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு மிக தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று மூட்டு வலி. அதனால் வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடலில் உள்ள எலும்பு மண்டலம் அமைப்பு மிக பலவீனமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதிலிருந்து விடுபட உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். அதன்படி ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூட்டு பகுதியில் தடவி மசாஜ் செய்து வந்தால் மூட்டு வலி தீரும். சீஸில் சத்து தரும் பாக்டீரியாவான புரோபையோடிக் அதிகம் உள்ளது.

இந்த வகை பாக்டீரியா மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் வலியையும் குறைக்க உதவுகிறது. எள்ளில் தாமிரம், கால்சியம் போன்ற நிறைய சத்துகள் உள்ளது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் முடக்கு வாதத்தையும் அதனால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க முடியும். எலுமிச்சை சாறை நீரில் கலந்து, எலுமிச்சை டீ தினமும் குடித்து வரலாம். இது உடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் வலிகளைக் குறைக்க உதவும். மேலும் பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகைகளில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரதம் அதிகம் நிறைந்துள்ளது. எனவே சத்தான எலும்புகள் பெற தினமும் இதனை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

Categories

Tech |