நடிகர் விஷாலின் ‘சக்ரா’ படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘சக்ரா’ . எம் எஸ் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ,மனோபாலா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார் .
சக்ரா படம் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த படத்தை வெளியிட ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது . இதனால் இந்த படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது . இந்நிலையில் அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது . இதனால் திட்டமிட்டபடி இந்த படம் நாளை 4 மொழிகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .