மேத்தி பன்னீர் செய்ய தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை – 1 கட்டு
தக்காளி – 3
பனீர் – 200 கிராம்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 3
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பல்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் வெந்தைய கீரையை ஆய்ந்து எடுத்து, தண்ணீரால் சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளியை போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் பன்னீர் துண்டுகளை போட்டு, சிறிது மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வைத்து அதன் தண்ணீரை வடிகட்டி விட்டு, பன்னீர் துண்டுகளை மட்டும் எடுத்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கியபின், அதனுடன் சுத்தம் செய்த வெந்தயக்கீரையை போட்டு சில நிமிடம் நன்கு வதக்கவும்.
பின்னர் நன்கு வதக்கிய வெந்தைய கீரையில், அரைத்த இஞ்சி கலவையை போட்டு, மிளகாய் தூள், தனியா தூள், ருசிக்கேற்ப உப்பு தூவி கரண்டியால் கிளறவிட்டபின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றியதும், தண்ணீர் வற்றி இறுக்கி கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
அடுத்து கெட்டியான கலவையில், அதில் வடிகட்டி எடுத்து வைத்த பன்னீர் துண்டுகளை போட்டுசில நிமிடம் மீண்டும் நன்கு கொதிக்க வைத்து, அதனுடன் தேவைக்கேற்ப கரம் மசாலா தூவி நன்கு கிளறி விட்டு கெட்டியானதும், அதன் மேல் நறுக்கி வைத்த வெந்தைய கீரையை தூவியபின், இறக்கி வைத்து சூடாக பரிமாறினால், ருசியான மேத்தி பன்னீர் ரெடி.