Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை கலெக்டர் ஆபீசில்… தூய்மைப் பணியாளர் தற்கொலை… காரணம் என்ன..?

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணி முடிந்து வீட்டுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டைமாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சக ஊழியர்கள் மொட்டை மாடிக்கு சென்றபோது அங்கு வேல்முருகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |