Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவில் என்பது மன அமைதிக்காக தான்…. பாகுபாடு உருவாக்க அல்ல… நீதிபதிகள் கருத்து…!!

கோவில் என்பது மன அமைதிக்காக தான், மனிதர்களிடையே பாகுபாடுகளை உருவாக்குவதற்கு இல்லை என்று மதுரை கிளை தெரிவித்துள்ளது.

திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயிலில் உட்பட்ட இரணி அம்மன் கோவில் விழா நடைபெறுகிறது. இதற்கு அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து விழா நடத்த வேண்டும். ஆனால் இரு தரப்பினருக்கு இடையே கோவில் விழாவை யார் நடத்துவது என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினருக்கும் இணைந்து  விழா நடத்த உரிய உத்தரவு பிறக்க வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப் பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்த வழக்கை ஒரு வித்தியாசமான வழக்கு. கோவில் என்பது வழிபாட்டிற்கான தான் அமைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் அடையாளமாக கோவில்கள் உள்ளன. நம்பிக்கை நல்ல எண்ணம் பெறுவதற்காக பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர்.கடவுள் எந்தவித உயர்வு தாழ்வு ஏற்றத்தாழ்வு பாகுபாடு பார்ப்பதில்லை. கடவுள் எந்த ஜாதியையும் ஏற்பதும் இல்லை மறுப்பதும் இல்லை.
கடவுள், மனிதர்களிடம் மனிதாபிமானத்தின் தான் எதிர்பார்பார்.

இறைவனை வணங்க செல்பவர்கள் மனிதாபிமானம் ஆக இருப்பதுதான் முக்கியம். மனிதர்கள் மத்தியில் பாகுபாடு பார்ப்பதை கடவுள் ஏற்க மாட்டார். வில் என்பது மன அமைதிக்காக தான், மனிதர்கள் இடையே பாகுபாடு உருவாக்குவதற்காக அல்ல. எனவே இந்த விஷயத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவில் இணை ஆணையர் இதுகுறித்து உரிய முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Categories

Tech |