தனியார் பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ராமநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தங்கப்பாண்டி. இவருடைய மகனான ராஜேந்திரன் என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையோரத்தில் நடந்துகொண்டிருக்கும்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று ராஜேந்திரன் மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.
இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து டிரைவரான ராஜேந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.