மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள குலமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் குருதேவி. இவர் அருகிலுள்ள கடைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்து நடந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து குருதேவியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து குருதேவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வழிபறியில் ஈடுபட்ட மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.