‘தளபதி65’ படத்தில் நண்பன் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். வருகிற ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர் . தற்போது தளபதி 65 படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் ,நடிகைகள் ,தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார் . தற்போது 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .