Categories
அரசியல் தேசிய செய்திகள்

பெருன்பான்மையை நிரூபிக்கணும்…. பதவியேற்ற முதல் நாளே…. அதிரடி காட்டிய தமிழிசை…!!

புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி பதவி நீக்கம் செய்யப்பட்டு தெலுங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி ஆளுநராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். கிரண்பேடி அவசரஅவசரமாக நீக்கப்பட்டு தமிழிசை சவுந்தரராஜன் அவருடைய இடத்தில் நியமிக்க்கப்பட்டது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரி அரசியலில் பரபரப்பு காணப்பட்டது.  இதையடுத்து நாராயணசாமி அரசுக்கும் முன்னாள் ஆளுநர் கிரண்பேடிக்கும் மோதல்  ஏற்பட்டு வந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகி பாஜகவில் இணைந்தனர். இதன்மூலம் புதுச்சேரி சட்டப்பேரவை காங்கிரஸின் பலம் 14 ஆக குறைந்தது.

இந்நிலையில் நாராயணசாமி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாகவும் பெரும்பான்மையை  கட்டாயம் நிரூபிக்கவேண்டும் என்று பேசப்பட்டு வந்தது. மேலும் நாராயணசாமி பதவி விலகப் போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து புதிய ஆளுநரை முதல்வர் நாராயணசாமி இன்று நேரில் சந்தித்து உள்ளார்.  இந்நிலையில் பிப்ரவரி 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெருன்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று நாராயணசாமிக்கு புதுவை ஆளுநர் தமிழிசை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பதவி பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழிசை அதிரடி காட்டியுள்ளார்.

Categories

Tech |