அல்சர் பிரச்சனையை நாம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எளிதில் குணப்படுத்த முடியும். அவை என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றிச் சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும்.
முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் பிரச்சனை சரியாகும்.
காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு.
தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
அல்சர் பிரச்சனைக்கு மற்றொரு சிறந்த தீர்வு ஒன்று உண்டு என்று இருந்தால் அது நெல்லிக்காய் தான். நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தால் அல்சர் பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றிக் குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல்(Stomach irritation) பிரச்சனை சரியாகும்.
பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்று புண் சரியாகும்.
வெந்தய டீ, கற்றாழை ஜூஸ்(Aloe Vera Juice) இதற்கு ஒரு நல்ல தீர்வாகும்.
குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.