Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜெய்ஹிந்த்’…’கருத்து சுதந்திரம்’… ஓவியாவின் வைரல் ட்வீட்…!!!

நடிகை ஓவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமனார் . கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தருவதை முன்னிட்டு பிப்ரவரி 13ஆம் தேதி ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது .

இதையடுத்து நடிகை ஓவியா மீது  பாஜகவினர் புகாரளித்தனர் . இந்நிலையில் நடிகை ஓவியா தனது ட்வீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளிக்கும் விதமாக ‘ஜெய்ஹிந்த், கருத்து சுதந்திரம்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |