Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தடுப்பூசியால் அடுத்தடுத்து 2 குழந்தைகள் மரணம்… மர்மம் என்ன?… தீவிர விசாரணை…!!!

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு மாசகளிபாளையத்தில் வசித்து வருபவர் பிரசாந்த் விஜயலட்சுமி. இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத குழந்தை உள்ளது. விஜயலட்சுமி மகன் கிசந்த் க்கு இரண்டரை மாத தடுப்பூசி போடுவதற்காக நேற்று முன்தினம் மாசக்களிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மைய முகாமிற்கு அழைத்துச் சென்றார். பிறகு நர்ஸ் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பின்னர் விஜயலட்சுமி குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்திலிருந்து  குழந்தை அழுது கொண்டே இருந்தது.

இந்நிலையில் சிறிது நேரம் கழித்து குழந்தைக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. எனவே குழந்தையை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையின் நிலையை பார்த்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்கள். பெற்றோர்கள் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் வரும்போதே குழந்தை வழியில்  இறந்துவிட்டதாக அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர்.

இதனைக் கேட்ட குழந்தையின் பெற்றோர்கள் கதறி அழுது அதிர்ச்சிக்குள்ளானர். பின்னர் இச்சம்பவம் குறித்து விஜயலட்சுமி சிங்காநல்லூர்  காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸ் விசாரணை நடத்திய போது அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போட்டதால் தான் குழந்தை இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் குழந்தையை உடற்கூறு ஆய்வு செய்ததில் குழந்தை நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அங்கன்வாடி மையத்தில் போடப்பட்ட தடுப்பூசியால் இறக்கவில்லை என்பதும் உறுதியாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தடுப்பூசி போட்ட மற்றொரு குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சவுரிபாளையம் பகுதியில் வசித்து வரும் தம்பதியினருக்கு வெற்றிமாறன் என்ற இரண்டரை மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்களின் குழந்தைக்கும் நேற்றுமுன்தினம் மசக்காளிபாளையம் அங்கன்வாடி துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. வெற்றிமாறன் மாலை வரை நன்றாக வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அதற்கடுத்து இரவில் நன்றாக தூங்கிய குழந்தை காலையில் எழுந்திரிக்கவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை தூக்கிக்கொண்டு பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்பு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வெற்றி ஏற்கனவே இறந்ததாக கூறினார்கள். இது பெற்றோர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. சம்பவத்தைப் பற்றி சுகாதாரதுறைஅதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை ஒரே நாளில் தடுப்பூசி போட்ட இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |