செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 கிராமங்களில் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் பேசுகையில்,” தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மினி கிளினிக்கை முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் திறக்கப்பட்டுள்ளன. அப்போது என்று கூறினார். மேலும் ஒரு கிராமத்துக்கு முக்கியமானது கோயில் மற்றும் பள்ளிகூட மட்டுமல்ல இது போன்ற மினி கிளினிக் தேவை.
ஒரு மினி கிளினிக்கில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புடைய மருந்துகளும், ஒரு டாக்டர், ஒரு துணை மருத்துவ உதவியாளர், ஒரு நர்ஸ் என நான்கு பேர்கள் இருப்பார்கள். இந்த அம்மா மினி கிளினிக்கில் பாம்பு கடி, நாய் கடிக்கு மருந்து உண்டு என்று கூறிய அவர் ஆமா, பேய்கடி இருக்கா என்ன? என்று கேட்டுள்ளார். தற்போது அமைச்சரின் இந்த பேய் கடி பேச்சுதான் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.