Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு… மக்களின் வாழ்கை பாதிக்குது… கடும் பனியால் கருகிய பயிர்கள்…!!

கடும் குளிர் மற்றும் பனியின் தாக்கத்தால் நீலகிரியில் பயிரிடப்பட்ட விவசாய செடிகள் கருகியதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒட்டுபட்டரை குன்னூர் மற்றும் அருவங்காடு போன்ற இடங்களில் உறை பனியின் தாக்கமானது அதிகமாக உள்ளது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி இருக்கிறது. அப்பகுதியில் மாலை 3 மணியில் இருந்தே கடும் பனி நிலவுவதால் வியாபாரிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உறைபனி தாக்கத்தாலும், கடும் குளிராலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து குன்னூர் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தேயிலை செடிகள் இந்த உறைபனி மற்றும் கடும் குளிரால் கருக ஆரம்பித்து விட்டன. அதோடு அப்பகுதியில் உள்ள புல்வெளிகளில் மீது பனி படர்ந்து போர்வை போல் காட்சியளிக்கிறது. இதனால் மனமுடைந்த விவசாயிகள் தேயிலை செடிகளை முற்றிலுமாக வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த கடும் குளிர் மற்றும் உறைபனி தாக்கத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |