Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… படத்தின் செம மாஸ் அப்டேட்…!!!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார் . இவர் நடிப்பில் உருவான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் சமீபத்தில் வெளியானது . இதையடுத்து நடிகர் சந்தானம் நடிப்பில் ‘டிக்கிலோனா’ திரைப்படம் தயாராகியுள்ளது . மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிகர் சந்தானம் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார் . இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர் .

இந்நிலையில் இந்த படத்தின் சூப்பரான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது . அதில் டிக்கிலோனா படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ ரீமிக்ஸ் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இதன் ரீமிக்ஸ் பாடல்  டிக்கிலோனா படத்தில் இடம் பெற்றிருப்பது  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |