Categories
அரசியல் மாநில செய்திகள்

நேர்மையா இருக்கணும்…. யாரும் வீழ்த்த நினைத்தால் முடியாது – முதல்வர் சூளுரை…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சிகளும், திமுக கட்சிகளும் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி, “நேர்மையான முறையில் தான் ஆட்சி அமைக்க முடியும். ஒருவரை வீழ்த்தி வர வேண்டும் என்று நினைத்தால் முடியாது என்று சூளுரைத்துள்ளார்.

அத்தனை அராஜகங்களையும் முறியடித்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் ஆட்சி செய்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சிகாலம் தான் பொற்காலம். யாருக்கும் வீடு இல்லை என்ற நிலையை உருவாக்க குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |