Categories
உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை வேண்டாம்…! முடிவை மாற்றிய ஸ்விஸ்… வெளியான புதிய தகவல் …!!

ஸ்விட்ஸர்லாந்தில் குழந்தைகளுக்காக ஏற்கனவே போட்ட விதிகளில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய குழு அறிவித்துள்ளது.

ஸ்விட்ஸர்லாந்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பிப்ரவரி 8ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்த நுழைவு விதிகளை மாற்றி புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஸ்விட்ஸர்லாந்தில் நுழையும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதியை மாற்றி, 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்ற விதி போடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் வணிகக் காரணங்களுக்காக சில நாட்கள் மட்டுமே தங்கும் லாரி ஓட்டுநர்கள் நுழைவு படிவத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .பி.சி.ஆர் சோதனையை விட கூடுதல் வேகமாக உள்ள ஆன்டிஜென் சோதனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |