தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்திலுள்ள கண்டா வர சொல்லுங்க என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இந்த படத்தின் “கண்டா வரச் சொல்லுங்க” பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பறை இசை முழங்க தென்மாவட்டங்களுக்கு என்று தனித்துவமாக உருவாக்கப்பட்ட பாடல் இது. இந்தப் பாடலில் கர்ணன் வாளுடன் வந்தால் எதிர்க்க எவனும் இல்லை என்று வரியை கேட்க கேட்க காது கிழிகிறது.