Categories
உலக செய்திகள்

“பொறுப்பே வேண்டாம்!” விலகிப்போன இளவரசர்… திடீரென அழைப்பு விடுத்த மகாராணியார்.. இது தான் காரணமா..?

பிரிட்டனில் மகாராணியார், ராஜ குடும்ப பொறுப்புகளில் விலகியிருந்த இளவரசர் மற்றும் அவரின் மனைவிக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் ஆகிய இருவரும் ராஜ குடும்பத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக மார்ச் 31ஆம் தேதி என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் அறிவித்து ஒரு வருடம் கழித்து மகாராணியார் இருவருக்கும் அவசர அழைப்பு விடுத்துள்ளார். அதாவது ஹரியும் மேகனும் வகித்த கௌரவப் பட்டங்களை யாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படுவதற்காக அழைத்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஹரி வகித்த பொறுப்புகள் இளவரசர் வில்லியமிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இதற்கு முன்பு ஹரி ராஜ குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதால் ராணுவ பட்டங்களும் பறிபோகும். இதனால் அவர் வருந்துவதாகவும் அவர் அதனை மட்டும் இழக்க விரும்பவில்லை என்ற தகவல் வெளியானது.

அதாவது இளவரசர் ஹரி கடற்கரையில் Royal Marines என்ற பிரிவில் கேப்டன் ஜெனரல், விமானப்படையின் கவுரவ தளபதி, சிறு கப்பல்கள் மற்றும் ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் தலைமை தளபதி போன்ற பல பட்டங்களையும் வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் ஹரி ராஜ குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலகுவதனால் பறிபோய்விடும்.

அதே சமயத்தில் பத்துவருடங்கள் ராணுவத்தில் பணியாற்றியதால் இளவரசர் ஹரி பெற்றிருந்த பட்டங்கள் மட்டும் அவரிடம் இருந்து என்றும் பறிக்கப்படாது. இதனிடையே பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட, வரும் மார்ச் 7ஆம் தேதி நடக்கவுள்ள ஓபரா வின்ஃப்ரேயுடனான பேட்டியில் ஹரி மற்றும் மேகன் ராஜ குடும்ப மரபுகளுக்கு எந்த வகையான களங்கமும் உண்டாகும்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்று மகாராணியார் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |