மொழியைக் கிண்டல் செய்த பிரபல சூப்பர் மார்க்கெட்டின் இயக்குனர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
பிரிட்டனில் இருக்கும் ஐஸ்லேண்ட் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த நிறுவனம் பிரிட்டன் முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தை கார்ப்பரேட் விவகார இயக்குனராக கீத் ஹான் என்பவர் 66 வருடத்திற்கு 102,000 பவுண்ட் என்ற சம்பளத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் வெல்ஸ் மொழியை ஜிபரிஷ் என்றும், இது ஒரு உயிரற்ற மொழி என்றும், இதைப் பேசுபவர்கள் கொப்பளித்துத் துப்புவது போன்று இருக்கும் என்றும் கடுமையாக கிண்டலடித்து தனது வலைதள பிளாக்கில் எழுதி பதிவிட்டுள்ளார். இது வெல்ஸ் மக்களிடையே கடும் கோபத்தை எழுப்பியது.
கோபமுற்ற வெல்ஸ் மக்கள் ஐஸ்லேண்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவத்தை புறக்கணிக்க தொடங்கினர். அதன்பின் நிலைமை மிகவும் மோசம் அடைந்ததால் கீத் ஹான் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை தான் நகைச்சுவையாக எழுதியதாக கூறினார். இப்படி கூறிய பின் தான் மேலும் விமர்சனங்களுக்கு ஆளானர். இதையடுத்து ஐஸ்லேண்ட் நிறுவனம் வேல்ஸ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டது. மேலும் கீத் ஹானை பதவியில் இருந்து நீக்கியது.