தேனி மாவட்டத்தில் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர், மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் சந்திரன்(49) மற்றும் அவரது மனைவி முனியம்மாள்(42) வசித்துவந்தனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளார்கள். குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவரின் மனைவி முனியம்மாள், கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார். அதனை பொருட்படுத்தாத அவளின் கணவன் சந்தேகப்பட்டு வேலைக்கு போக வேண்டாம் என்று கூறி வந்திருக்கிறார். இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்பு அவர்கள் வசித்து வரும் தெருவில் துக்க வீட்டிற்கு போக வேண்டும் அதனால் மனைவியை வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னார். அதை கண்டுகொள்ளாத முனியம்மாள் வழக்கம்போல் ஏலக்காய் தோட்டத்திற்கு செல்வதற்காக மீனாட்சிபுரத்தில் பேருந்து நிற்கும் இடத்தில் நின்றுகொண்டிருந்தாள். அவளின் கணவன் அங்கும் வந்து வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியும் அதனை கேக்காமல் சென்றதால் மனைவியிடம் தகராறு செய்ததாக கூறுகிறார்கள். இதனை கண்டுகொள்ளாத முனியம்மாள் நின்று கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த அவளின் கணவன் தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து சரமாரியாக வெட்டி விட்டு ஓடினான்.
தகவலை அறிந்த தேவாரம் போலீசார் விரைவாக வந்தனர். பின்பு முனியம்மாள் உடலை உடல்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனை உத்தமபாளையத்தில் போலீசார் அனுப்பி வைத்தனர். இத்தகவலை அறிந்த சந்திரன் மாயமானார். காவல்துறையினர் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் இருந்தார் உடனே வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்கள். காவல்துறை சந்திரனை விசாரித்தபோது தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப் பட்டதாகவும், வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை இதனால்தான் நான் கொலை செய்தேன் என்று சந்திரன் வாக்குமூலம் கொடுத்தனர். இச்சம்பவம் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.