Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏலத்துக்கு எடுத்த மும்பை அணி…. சச்சின் மகனுக்கு அடித்தது லக்…!!

சென்னையில் 14வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது.  ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்த தமிழக வீரர் நடராஜனுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழுத் தலைவர் பிரிஜேஸ் படேல் புகழாரம் தெரிவித்துள்ளார். நடராஜனை போலவே வீரர்களை உருவாக்க உள்ளதாக பெருமிதம் தெரிவித்தனர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது.

மற்ற எந்த அணியும் அர்ஜூன் டெண்டுல்கரை வாங்க முன்வராததால், அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு மும்பை அணி வாங்கியுள்ளது. முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அர்ஜுன் தன்னுடைய தந்தை போல ஜொலிப்பாரா? என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories

Tech |