உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலக அளவில் விஞ்ஞானிகள் கொரோனாவிற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “இந்தியாவின் திறமையான மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவ கட்டமைப்புகள் காரணமாக உலகின் மருத்துவ சுற்றுலாவில் முன்னணி நாடாக இந்தியா உள்ளது.
உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படும் இந்தியா, அதிக அளவில் மருந்துகளை உற்பத்தி செய்வதுடன், பெரும் எண்ணிக்கையில் தடுப்பூசிகளை உலகம் முழுவதும் விநியோகிக்கிறது” என்று கூறியுள்ளார்.